இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன்.
inpattuL inpam vizhaiyAtAn tunpattuLtunpa muRutal ilan
Shambavi Bhaskar
பொருள் / உரை
முருகா எளிய உரை
இன்பம் வரும் காலத்தில் அதில் மயங்கிப் பூரிப்படைந்து விடாத சமநிலை கொண்ட மனிதன், துன்பம் வந்து தாக்கும் காலத்திலும் மனம் கலங்கித் தளர்ந்து போவதில்லை.
• இன்பத்துள் இன்பம் விழையாதான் = இன்பம் வரும்போது அதில் மயங்கி விடாதவன்,• துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் = துன்பம் வரும்போதும் மனம் சோர்ந்து துன்பப்படமாட்டான்.
மு.வரதராசன்
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
பரிமேலழகர்
இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)
சாலமன் பாப்பையா
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
Meaning in English
Mid joys he yields not heart to joys' control Mid sorrows, sorrow cannot touch his soul





