Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 627

பொருட்பால்அரசியல்63. இடுக்கணழியாமை

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல்.

ilakkam uTampiTumpaik kenRu kalakkattaikkaiyARAk koLLAtA mEl

M. K. Balaji

பொருள் / உரை

முருகா எளிய உரை

'இந்த மானிட உடம்பானது துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உரிய இயற்கை இலக்கு' என்பதை உணர்ந்த மேன்மக்கள், துன்பம் வரும்போது மனம் கலங்குவதை ஒருபோதும் தமக்குரிய நெறியாகக் கொள்ளமாட்டார்கள்.

• உடம்பு இடும்பைக்கு இலக்கமென்று = 'இந்த உடம்பு துன்பத்திற்குரிய இலக்கு' என்று உணர்ந்து,• கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் = பெரியோர்கள் துன்பம் வரும்போது மனம் கலங்குவதைத் தமக்குரிய நெறியாகக் கொள்ளமாட்டார்கள்.

மு.வரதராசன்

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

பரிமேலழகர்

உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் - தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.)

சாலமன் பாப்பையா

உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

Meaning in English

'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout