Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 626

பொருட்பால்அரசியல்63. இடுக்கணழியாமை

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர்.

aRREmen RallaR paTupavO peRREmenROmputal tERRA tavar

Monika

பொருள் / உரை

முருகா எளிய உரை

செல்வம் சேர்ந்திருந்த காலத்தில் 'இதை அடைந்தோமே' என்று கஞ்சத்தனத்தோடு பூட்டிப் பாதுகாக்காத தாராள குணம் கொண்டவர்கள், வறுமை வந்த காலத்தில் 'எல்லாவற்றையும் இழந்துவிட்டோமே' என்று மனம் கலங்கித் துயரப்பட மாட்டார்கள்.

• பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாதவர் = செல்வம் வந்தபோது பேராசையுடன் பூட்டிப் பாதுகாக்காதவர்கள்,• அற்றேமென்று அல்லற்படுபவோ = வறுமை வந்த காலத்தில் இழந்தோமே என்று கலங்கித் துயர்ப்படுவார்களா? (படமாட்டார்கள்).

மு.வரதராசன்

செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

பரிமேலழகர்

அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?

Meaning in English

Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout