Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 624

பொருட்பால்அரசியல்63. இடுக்கணழியாமை

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

maTuttavA yellAm pakaTannAn uRRaiTukkaN iTarppA TuTaittu

Alexander Babu

பொருள் / உரை

முருகா எளிய உரை

சேறும் பள்ளமுமான கடின பாதையிலும் தளராமல் வண்டியை இழுக்கும் காளையைப் போல தடைகளை வென்று முன்னேறும் மனிதனைத் தாக்கிய துன்பமே அவனது உறுதியைக் கண்டு துன்பப்பட்டுத் தோற்று அழியும்.

• மடுத்தவாயெல்லாம் பகடன்னான் = தடைபட்ட பாதைகளிலும் பாரத்தை இழுக்கும் எருது போன்ற மனிதனை,• உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து = தாக்கிய துன்பமே அவனைக் கண்டு துன்பப்பட்டு அழியும்.

மு.வரதராசன்

தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

பரிமேலழகர்

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.)

சாலமன் பாப்பையா

செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

Meaning in English

Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout