இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர்.
iTumpaik kiTumpai paTuppar iTumpaikkiTumpai paTAa tavar
Jayaraman Balasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
துன்பம் வரும்போது அதற்காக மனம் வருந்திக் கலங்காத மன உறுதி கொண்டவர்கள், தமக்கு வந்த அந்தத் துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி அதனைத் தோற்கடித்து விடுவார்கள்.
• இடும்பைக்கு இடும்பை படாஅதவர் = வரும் துன்பத்திற்கு மனம் தளராத உறுதியுடையவர்,• இடும்பைக்கு இடும்பை படுப்பர் = அந்தத் துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி வெற்றி பெறுவர்.
Murugaa simple commentary
Those who possess the firmness of mind not to grieve and be shaken when distress comes, will cause distress to that very distress that came upon them and defeat it.
• Those who do not suffer distress from distress = Those who have the firmness of mind not to lose heart at coming distress,• Will cause distress to distress = Will cause distress to that distress itself and attain victory.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
பரிமேலழகர்
இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)
Parimelazhagar
Those who do not suffer distress at distress, those who do not grieve at the distress that comes in between when performing an action; they will cause distress to distress, they themselves will cause distress to that very distress. (Grieving, thinking of growing weary and giving up. As they strive unceasingly with firmness of mind, the action is completed and becomes fruitful. When it turns out so, since all distresses cease to exist, he said, 'they will cause distress to distress'. Take it in this same manner for this in the coming two verses also. Repetition of both word and meaning.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
Meaning in English
Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart

