வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்.
veLLat tanaiya iTumpai aRivuTaiyAnuLLattin uLLak keTum
Hannah Catherine
பொருள் / உரை
முருகா எளிய உரை
வெள்ளம் போலக் கரைபுரண்டு வரும் பெருந்துன்பமும் கூட, விவேகம் உடைய மனிதன் தன் மனத்தால் அதன் நிலையற்ற இயல்பை உணர்ந்து அமைதியோடு ஆராய்ந்த மாத்திரத்திலேயே அழிந்து போகும்.
• வெள்ளத்தனைய இடும்பை = வெள்ளம் போல் பொங்கி வரும் துன்பமும்,• அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் = அறிவுடையவன் மனத்தால் அதன் இயல்பை ஆராய்ந்து பார்த்த மாத்திரத்திலேயே அழிந்துவிடும்.
மு.வரதராசன்
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
பரிமேலழகர்
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார்.இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
Meaning in English
Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is gone





