Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 621

பொருட்பால்அரசியல்63. இடுக்கணழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில்.

iTukkaN varungkAl nakuka atanaiaTuttUrva taஃtoppa til

Rakshita Suresh

பொருள் / உரை

முருகா எளிய உரை

துன்பங்களும் சோதனைகளும் வரும்போது மனம் கலங்கி விடாமல் புன்னகையோடு எதிர்கொள்ள வேண்டும்; அந்தத் துன்பத்தை விரட்டியடித்து வெற்றிபெற அம்மகிழ்ச்சியான மன உறுதியைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை.

• இடுக்கண் வருங்கால் நகுக = துன்பம் வரும்போது மனம் கலங்காமல் புன்னகையோடு எதிர்கொள்க;• அதனை அடுத்தூர்வது அஃதொப்பதில் = அந்தத் துன்பத்தை வெல்லும் ஆற்றல் அந்த மனமகிழ்ச்சியைப் போல் வேறெதற்கும் இல்லை.

மு.வரதராசன்

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

பரிமேலழகர்

இடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான். (வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)

சாலமன் பாப்பையா

நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

Meaning in English

Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout