மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள்.
maTiyuLAL mAmukaTi enpa maTiyilAntALuLAL tAmaraiyi nAL
Durairajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சோம்பலில் மூழ்கிக் கிடப்பவனிடத்தில் வறுமை தரும் மூதேவி வந்து குடியேறுவாள்; சோம்பலின்றி அயராது உழைக்கும் மனிதனின் முயற்சியினிடத்திலே செல்வத்தைத் தரும் திருமகள் தங்குவாள்.
• மடியுளாள் மாமுகடி = சோம்பேறியிடம் வறுமை தரும் மூதேவி தங்குவாள்;• மடியிலான் தாளுளாள் தாமரையினாள் என்ப = சோம்பல் இல்லாதவனின் முயற்சியில் செல்வமகள் திருமகள் தங்குவாள் என்று பெரியோர் கூறுவர்.
மு.வரதராசன்
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
பரிமேலழகர்
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
Meaning in English
In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; Where man unslothful toils, she of the lotus flower is there





