Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 616

பொருட்பால்அரசியல்62. ஆள்வினையுடைமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

muyaRsi tiruvinai Akkum muyaRRinmaiinmai pukutti viTum

Shenbagaraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• முயற்சி திருவினை ஆக்கும் = விடாமுயற்சியானது ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்;• முயற்றின்மை = அந்த முயற்சி இல்லாதிருத்தல்,• இன்மை புகுத்திவிடும் = அவனிடம் கொடிய வறுமையைக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.எளிய விளக்கம்:இடைவிடாது செய்யும் உழைப்பும் முயற்சியும் ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி செய்யாமல் இருக்கும் சோம்பல் அவனிடத்தில் வறுமையைக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.

மு.வரதராசன்

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

பரிமேலழகர்

முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Meaning in English

Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout