தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
tALANmai ennun takaimaikkaN tangkiRREvELANmai ennunj serukku
Vidya Kalyanaraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
விடாமுயற்சி செய்து பொருள் ஈட்டும் உயர்ந்த நற்பண்பில்தான், பிறர் அனைவருக்கும் வாரி வழங்கி உதவும் ஈகை என்கின்ற மேலான பெருமித உணர்வு நிலைபெற்று விளங்குகிறது.
• தாளாண்மை என்னும் தகைமைக்கண் = விடாமுயற்சி என்னும் உயர்ந்த நற்குணத்தில்தான்,• வேளாண்மை என்னுஞ் செருக்கு தங்கிற்று = பிறருக்கு உதவும் ஈகை என்னும் பெருமித உணர்வு நிலைபெற்றிருக்கிறது.
மு.வரதராசன்
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
பரிமேலழகர்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
Meaning in English
In strenuous effort doth reside The power of helping others: noble pride





