வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
vinaikkaN vinaikeTal Ompal vinaikkuRaitIrntArin tIrntan Rulaku
R. P. Shravan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு காரியத்தைத் தொடங்கிய பின் இடையில் சோர்வுற்று அதனைக் கைவிட்டு விடுவதைத் தவிர்க்க வேண்டும்; தொடங்கிய செயலை முடிக்காமல் அரைகுறையாக விடுபவர்களை இந்த உலகமும் மதிக்காமல் அடியோடு கைவிட்டுவிடும்.
• வினைக்கண் வினைகெடல் ஓம்பல் = தொடங்கிய செயலை இடையில் கைவிடுவதைத் தவிர்க்க வேண்டும்;• வினைக்குறை தீர்ந்தாரின் = செயலை அரைகுறையாக விட்டவர்களை,• தீர்ந்தன்று உலகு = இந்த உலகம் மதிக்காமல் அடியோடு கைவிட்டுவிடும்.
மு.வரதராசன்
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
பரிமேலழகர்
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
Meaning in English
In action be thou, 'ware of act's defeat; The world leaves those who work leave incomplete





