Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 611

பொருட்பால்அரசியல்62. ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.

arumai uTaitten RasAvAmai vENTumperumai muyaRsi tarum

Sreekrishnan Swaminathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

'இச்செயல் நம்மால் செய்து முடிக்க முடியாத கடினமான காரியம்' என்று எண்ணி மனம் தளரக்கூடாது; இடைவிடாது செய்யும் முயற்சியே அதனை முடித்துக் காட்டும் பேராற்றலையும் பெருமையையும் தந்துவிடும்.

• அருமை உடைத்தென்று = 'செய்வதற்கு மிகவும் கடினமானது' என்று எண்ணி,• அசாவாமை வேண்டும் = மனம் தளர்ந்து விடாமல் இருக்க வேண்டும்;• பெருமை முயற்சி தரும் = அதைச் செய்து முடிக்கும் பேராற்றலையும் பெருமையையும் தொடர் முயற்சியே உண்டாக்கித் தரும்.

மு.வரதராசன்

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,

பரிமேலழகர்

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

Meaning in English

Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout