மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு.
maTiyilA mannavan eytum aTiyaLantAntAaya tellAm orungku
S. N. Surendar
பொருள் / உரை
முருகா எளிய உரை
சோம்பல் சிறிதும் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயலாற்றும் ஓர் ஆட்சியாளன், இறைவன் தன் திருவடியால் அளந்து நின்ற இந்த உலகம் முழுவதையும் ஒருசேரத் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து அடைவான்.
• அடியளந்தான் தாஅயதெல்லாம் = இறைவனது திருவடி அளந்த உலகம் முழுவதையும்,• மடியிலா மன்னவன் = சோம்பல் இல்லாத அரசன்,• ஒருங்கு எய்தும் = ஒருசேரத் தன் வசப்படுத்தி அடைவான்.
மு.வரதராசன்
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
பரிமேலழகர்
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
Meaning in English
The king whose life from sluggishness is rid, Shall rule o'er all by foot of mighty god bestrid





