Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 609

பொருட்பால்அரசியல்61. மடியின்மை

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.

kuTiyANmai yuLvanta kuRRam oruvanmaTiyANmai mARRak keTum

Vijai Shankar

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை அடியோடு ஒழித்து உழைக்கத் தொடங்கிவிட்டால், அவனது குடும்பத்தின் மீதும் அவனது ஆளுமையின் மீதும் முன்பே சேர்ந்திருந்த குற்றங்களும் பழிகளும் நீங்கிவிடும்.

• ஒருவன் மடியாண்மை மாற்ற = ஒருவன் தன்னை ஆளும் சோம்பலை ஒழித்துவிட்டால்,• குடியாண்மையுள் வந்த குற்றம் கெடும் = அவனது குடும்பத்தின் மீதும் அவனது ஆளுமையின் மீதும் படிந்த பழிகள் நீங்கிவிடும்.

மு.வரதராசன்

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

பரிமேலழகர்

ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். (மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

Meaning in English

Who changes slothful habits saves Himself from all that household rule depraves

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout