மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.
maTimai kuTimaikkaN tangkiRRan nennArkkaTimai pukutti viTum
Bharathi Caldwell
பொருள் / உரை
முருகா எளிய உரை
சிறந்த நற்குடியில் பிறந்த மனிதனாக இருந்தாலும், அவனிடம் சோம்பல் குடியேறிவிட்டால், அஃது அவனை அவனது பகைவர்களிடம் தலைகுனிந்து கைகட்டி நிற்கும் அடிமையாக்கிவிடும்.
• மடிமை குடிமைக்கண் தங்கின் = நற்குடியில் பிறந்தவனிடம் சோம்பல் குடியேறிவிட்டால்,• தன் ஒன்னார்க்கு = அவனுடைய பகைவர்களிடம்,• அடிமை புகுத்திவிடும் = அவனை அடிமையாக்கி வீழ்த்திவிடும்.
மு.வரதராசன்
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
பரிமேலழகர்
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.
சாலமன் பாப்பையா
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
Meaning in English
If sloth a dwelling find mid noble family, Bondsmen to them that hate them shall they be





