மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.
maTimaTik koNTozhukum pEtai piRantakuTimaTiyun tanninu muntu
Soumya Radhakrishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒழிக்க வேண்டிய சோம்பலைத் தனக்குள் வளர்த்துக்கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பமானது, அவனது ஆயுள் முடிந்து அவன் அழிவதற்கு முன்னதாகவே முந்திக்கொண்டு அழிந்துவிடும்.
• மடிமடிக் கொண்டொழுகும் பேதை = சோம்பலைத் தனக்குள் கொண்டு வாழும் அறிவற்றவன்,• பிறந்த குடி = பிறந்த குடும்பமானது,• தன்னினும் முந்து மடியும் = அவன் அழிவதற்கு முன்பாகவே அழிந்து போய்விடும்.
மு.வரதராசன்
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
பரிமேலழகர்
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
Meaning in English
Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himself





