உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.
uLLam ilAtavar eytAr ulakattuvaLLiyam ennunj serukku
Akshaya Muralidharan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மன ஊக்கம் இல்லாதவர்கள் முயற்சி செய்து பொருளை ஈட்ட முடியாத காரணத்தால், 'பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல் நாம்' என்கின்ற உயர்வான பெருமித உணர்வை இவ்வுலகில் ஒருபோதும் அடைய மாட்டார்கள்.
• உள்ளம் இலாதவர் = மன ஊக்கம் இல்லாதவர்கள்,• உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு = 'பிறருக்கு வழங்கும் வள்ளல் நாம்' என்னும் பெருமிதத்தை,• எய்தார் = ஒருபோதும் அடைய மாட்டார்கள்.
மு.வரதராசன்
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
பரிமேலழகர்
உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார். (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
Meaning in English
The soulless man can never gain Th' ennobling sense of power with men





