சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.
sitaiviTat tolkAr uravOr putaiyampiRpaTTuppA TUnRung kaLiRu
Sreeraj Sahajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அம்புகள் துளைத்து உடலை மூடியபோதும் போர்யானை தளராமல் தன் கம்பீரத்தை நிலைநிறுத்தும்; அதுபோலவே, மன ஊக்கம் உடையவர்கள் பெருந்துன்பங்களும் அழிவும் வந்தபோதும் சற்றும் உள்ளம் தளராமல் உறுதியோடு நிற்பர்.
• புதையம்பின் பட்டுப் பாடூன்றும் களிறு = அம்புகள் துளைத்த போதும் போர்யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்;• உரவோர் = அதுபோலவே மன ஊக்கம் கொண்ட வலிமையாளர்கள்,• சிதைவிடத்து ஒல்கார் = பெருங்கேடு வந்த காலத்திலும் சற்றும் உள்ளம் தளர மாட்டார்கள்.
மு.வரதராசன்
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
பரிமேலழகர்
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.' (புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
Meaning in English
The men of lofty mind quail not in ruin's fateful hour, The elephant retains his dignity mind arrows' deadly shower





