Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 596

பொருட்பால்அரசியல்60. ஊக்கமுடைமை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

uLLuva tellAm uyarvuLLal maRRatutaLLinun taLLAmai nIrttu

Caldwell Velnambi

பொருள் / உரை

முருகா எளிய உரை

எண்ணுவதெல்லாம் மிக உயர்ந்த லட்சியங்களையே எண்ண வேண்டும்; அந்த உயர்வான எண்ணம் ஒருவேளை கைகூடாவிட்டாலும் கூட, அத்தகைய மேன்மையான குறிக்கோளைக் கொண்ட பெருமையே அவனுக்கு நற்புகழைத் தரும்.

• உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் = நினைப்பதெல்லாம் மிக உயர்ந்த மேன்மையான லட்சியங்களையே எண்ண வேண்டும்;• மற்றது தள்ளினும் = அவ்வெண்ணம் ஒருவேளை கைகூடாவிட்டாலும்,• தள்ளாமை நீர்த்து = அப்படி எண்ணிய மன உறுதியே ஒருபோதும் கைவிட முடியாத பெருமையைத் தரும்.

மு.வரதராசன்

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

பரிமேலழகர்

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)

சாலமன் பாப்பையா

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.

Meaning in English

Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout