வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.
veLLat tanaiya malarnITTam mAntartamuLLat tanaiya tuyarvu
Jijin Jose
பொருள் / உரை
முருகா எளிய உரை
நீரின் அளவுக்கு ஏற்பவே தாமரை மலரின் தண்டு மேலே உயர்ந்து நிற்கும்; அதுபோலவே, மனிதர்கள் வாழ்வில் அடையும் உயர்வும் அவர்கள் தம் உள்ளத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அமையும்.
• வெள்ளத்தனைய மலர்நீட்டம் = குளத்து நீரின் உயரத்திற்கு ஏற்பவே தாமரைத் தண்டு உயர்ந்து நிற்கும்;• மாந்தர்தம் உயர்வு = அதுபோலவே மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வும்,• உள்ளத்தனையது = அவர்கள் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே அமையும்.
மு.வரதராசன்
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
பரிமேலழகர்
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி. ('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)
சாலமன் பாப்பையா
நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.
Meaning in English
With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their minds





