Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 594

பொருட்பால்அரசியல்60. ஊக்கமுடைமை

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.

Akkam atarvinAys sellum asaivilAUkka muTaiyA nuzhai

Kala & Chitra

பொருள் / உரை

முருகா எளிய உரை

எத்தகைய துன்பங்கள் வந்தாலும் சற்றும் தளராத ஊக்கம் கொண்டவனிடத்தில், செல்வமும் வெற்றியும் தானே வழி கேட்டுக்கொண்டு தேடிச் சென்று சேர்ந்துவிடும்.

• அசைவிலா ஊக்கமுடையான் உழை = சற்றும் தளராத மன ஊக்கம் உடையவனிடம்,• ஆக்கம் = செல்வமும் உயர்வும்,• அதர்வினாய்ச் செல்லும் = தானே வழி கேட்டுக்கொண்டு தேடிச் சென்று சேரும்.

மு.வரதராசன்

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

பரிமேலழகர்

அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும். (அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

Meaning in English

The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwell

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout