உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.
uTaiyar enappaTuva tUkkamaஃ tillAruTaiya tuTaiyarO maRRu
Aishwarya Balasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதன் உண்மையான சொத்து உடையவன் என்று மதிக்கப்படுவது அவனிடமுள்ள சோர்வில்லாத மன ஊக்கமே ஆகும்; அந்த ஊக்கம் இல்லாதவர்கள் வேறு எந்தப் பொருட்செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆக மாட்டார்கள்.
• உடையர் எனப்படுவது ஊக்கம் = ஒருவர் உண்மையிலேயே உடையவர் என்று போற்றப்படுவது அவரிடமுள்ள மன ஊக்கமே ஆகும்;• அஃதில்லார் = அந்த ஊக்கம் இல்லாதவர்,• மற்று உடையது உடையரோ = வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதனை உடையவர் ஆக மாட்டார்கள்.
மு.வரதராசன்
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
பரிமேலழகர்
உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
Meaning in English
'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul





