உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.
uLLa muTaimai uTaimai poruLuTaimainillAtu nIngki viTum
Karthik Kumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• உள்ளம் உடைமை உடைமை = ஒருவனுக்கு மன ஊக்கமே நிலையான உடைமையாகும்;• பொருளுடைமை = வெளிப்புறப் பொருட்செல்வமானது,• நில்லாது நீங்கிவிடும் = நிலைத்து நிற்காமல் காலப்போக்கில் நீங்கிவிடும்.எளிய விளக்கம்:ஒரு மனிதனுக்கு அவனது மனதிலுள்ள தளராத ஊக்கமே என்றும் அழியாத நிலையான உடைமையாகும்; புறத்தேயுள்ள பொன்னும் பொருளும் நிலைத்து நிற்காமல் எப்படியும் நீங்கி அழிந்துவிடும்.
மு.வரதராசன்
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
பரிமேலழகர்
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
Meaning in English
The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs





