Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 590

பொருட்பால்அரசியல்59. ஒற்றாடல்

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.

siRappaRiya oRRinkaN seyyaRka seyyiRpuRappaTuttAn Akum maRai

Swetha Murali

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• ஒற்றின்கண் சிறப்பு = ஒற்றனுக்குச் செய்யும் பரிசுகளையும் பாராட்டுகளையும்,• அறியச் செய்யற்க = பிறர் அறியும்படி வெளிப்படையாகச் செய்யக்கூடாது;• செய்யின் = அவ்வாறு பகிரங்கமாகச் செய்தால்,• மறை புறப்படுத்தான் ஆகும் = நாட்டின் உளவு ரகசியங்களையும் ஒற்றனின் அடையாளத்தையும் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.எளிய விளக்கம்:உண்மை நிகழ்வுகளை அறிந்து சொன்ன ஒற்றனுக்குச் செய்யும் பரிசுகளையும் சிறப்புகளையும் பிறர் அறியும்படி வெளிப்படையாகச் செய்யக்கூடாது; அவ்வாறு செய்தால், பாதுகாக்க வேண்டிய உளவு ரகசியத்தையும் ஒற்றனின் அடையாளத்தையும் ஆட்சியாளனே வெளிப்படுத்தியவன் ஆவான்.

மு.வரதராசன்

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

பரிமேலழகர்

ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம். (மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

Meaning in English

Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to light

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout