புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.
pukazhpurin tillilOrk killai ikazhvArmunERupOl pITu naTai
Akash Mathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
இகழ்ந்திடுவார் முன்னே ஆண்சிங்கம் போலே!மனைவி புகழ்காக்கும் பண்பு இல்லார்க்கு!குடும்பப் புகழ்காக்கும் துணை இல்லார்க்கு!நிமிர்ந்த பெருநடை இல்லை அவர்க்கு!
• புகழ் புரிந்த = குடும்பத்திற்குரிய நற்புகழைக் காக்க விரும்பும்• இல் இலோர்க்கு = நற்பண்புடைய மனைவி அமையாதவருக்கு,• இகழ்வார் முன் = தம்மை இகழ்ந்து ஏளனம் பேசுவோர் முன்னிலையில்,• ஏறு போல் = ஆண் சிங்கம் (அல்லது காளை) போல• பீடு நடை இல்லை = கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நடக்கும் பெருமித நடை அமையாது.
Murugaa simple commentary
Before those who despise, like a male lion!To those who do not have a wife with the quality of protecting reputation!To those who do not have a companion who protects family reputation!There is no upright proud stride for them!
• Desiring fame = Wishing to protect the good reputation belonging to the family• To those without a home = To one who does not have a virtuous wife,• Before those who despise = In the presence of those who despise and mock them,• Like a male = Like a male lion (or bull)• There is no proud stride = The proud stride of walking majestically with head held high will not be possible.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
பரிமேலழகர்
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
Parimelazhagar
For those without a praise-loving wife, for those who do not have a wife who desires praise; there is no proud walk like a male lion before those who scorn, there is no proud walk like a male lion before enemies who speak scornfully of them. (The letter 'a' of the relative participle 'purintha' was elided by poetic modification. Because the male lion is the simile in gait for one who possesses pride, he said 'like a male lion'. By this, the fault that arises when a worthy reputation is not guarded was stated.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
Meaning in English
Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight

