Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 58

அறத்துப்பால்இல்லறவியல்6. வாழ்க்கைத் துணைநலம்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு.

peRRAR peRinpeRuvar peNTir perunjsiRappupputtELir vAzhum ulaku

Muthamil

பொருள் / உரை

முருகா எளிய உரை

கணவனையே போற்றி வாழும் பெண்டிரே!நற்பண்பினை எந்நாளும் பெற்றிடுவாரே!தேவர் வாழும் அவ்வுலகிலும் அவரே!பெருஞ்சிறப்பும் புகழும் பெறுவாரே!

• பெண்டிர் = இல்லறப் பெண்கள்• பெற்றான் பெறின் = தம்மை மணந்துகொண்ட கணவனைப் போற்றி வாழும் நற்பண்பைப் பெற்றால்,• புத்தேளிர் வாழும் உலகு = தேவர்கள் வாழ்கின்ற மேலுலகத்திலும்• பெருஞ்சிறப்புப் பெறுவர் = அந்தத் தேவர்களாலேயே போற்றப்படும் பெரும் சிறப்பையும் புகழையும் அடைவார்கள்.

மு.வரதராசன்

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

பரிமேலழகர்

பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

Meaning in English

If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout