ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
oRRoRRit tanta poruLaiyum maRRumOroRRinAl oRRik koLal
Gokul Krishnan V
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும் உடனே நம்பிவிடாமல், மற்றொரு தனி ஒற்றனைக் கொண்டும் உளவறிந்து இரண்டும் ஒத்துப் போகிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே உண்மையை உறுதி செய்ய வேண்டும்.
• ஒற்றொற்றித் தந்த பொருளையும் = ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும்,• மற்றுமோர் ஒற்றினால் = மற்றொரு சார்பற்ற ஒற்றனைக் கொண்டும்,• ஒற்றிக் கொளல் = ஆராய்ந்து சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மு.வரதராசன்
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க. (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.
Meaning in English
Spying by spies, the things they tell To test by other spies is well





