Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 583

பொருட்பால்அரசியல்59. ஒற்றாடல்

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல்.

oRRinAn oRRip poruLteriyA mannavankoRRang koLakkiTanta til

Shanthini Subhash

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒற்றர்களைக் கொண்டு உண்மை நிகழ்வுகளை உளவறிந்து, அவற்றின் விளைவுகளை ஆராய்ந்து அறியாத ஓர் ஆட்சியாளன், தனது ஆட்சியில் வெற்றி பெற்று நிலைத்து நிற்பதற்கு வேறு எந்த வழியும் இல்லை.

• ஒற்றினான் ஒற்றி = ஒற்றர்களைக் கொண்டு உண்மை நிலவரங்களை உளவறிந்து,• பொருள் தெரியா மன்னவன் = அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறியாத தலைவனுக்கு,• கொற்றம் கொளக்கிடந்தது இல் = வெற்றியை நிலைநாட்ட வேறு எந்த வழியும் இல்லை.

மு.வரதராசன்

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

பரிமேலழகர்

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை. (அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

Meaning in English

By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout