Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 584

பொருட்பால்அரசியல்59. ஒற்றாடல்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று.

vinaiseyvAr tanjsuRRam vENTAtA renRAngkanaivaraiyum ArAyva toRRu

Shruthi S Bhat

பொருள் / உரை

முருகா எளிய உரை

அரசுப் பணியாளர்கள், ஆட்சியாளரின் சொந்த உறவினர்கள், பகைவர்கள் என எல்லாரது சொல் செயல்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி நடுநிலையோடு ஆராய்ந்து அறிவதே சிறந்த ஒற்றரின் பணியாகும்.

• வினைசெய்வார் = அரசுப் பணியாளர்கள்,• தம்சுற்றம் = ஆட்சியாளரின் சொந்த உறவினர்கள்,• வேண்டாதார் = பகைவர்கள்,• என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று = என்று சொல்லப்படும் அனைவரையும் பாகுபாடின்றி ஆராய்வதே ஒற்றரின் பணியாகும்.

மு.வரதராசன்

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

பரிமேலழகர்

தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான்.('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.)

சாலமன் பாப்பையா

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

Meaning in English

His officers, his friends, his enemies, All these who watch are trusty spies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout