Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 580

பொருட்பால்அரசியல்58. கண்ணோட்டம்

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.

peyakkaNTu nanjsuN Tamaivar nayattakkanAkarikam vENTu pavar

Dinesh Sivaraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

எல்லாராலும் விரும்பப்படும் உயரிய பண்பான கண்ணோட்டத்தை விரும்பும் சான்றோர்கள், தம்மோடு பழகியவர் தமக்கு நஞ்சைக் கலந்து தருகிறார் என்று தெரிந்தபோதும் முகம் சுளிக்காமல் ஏற்று அமைதி காப்பர்.

• நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் = எல்லாரும் விரும்பும் உயரிய கண்ணோட்டப் பண்பை விரும்புகிறவர்கள்,• பெயக்கண்டும் = பழகியவர் நஞ்சைக் கலந்து தருகிறார் என்று நேரில் கண்டபோதும்,• நஞ்சுண்டு அமைவர் = முகம் சுளிக்காமல் அதனை ஏற்று அமைதி காப்பர்.

மு.வரதராசன்

எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

பரிமேலழகர்

நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர். (நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

Meaning in English

They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout