ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.
oRuttARRum paNpinAr kaNNungkaN NOTippoRuttARRum paNpE talai
Swarnapavithra N
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்குத் துன்பம் செய்வதையே இயல்பாகக் கொண்ட கொடியவர்களிடத்திலும் கூட, இரக்கத்தோடு பரிவு காட்டி அவர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும் உயரிய நற்குணமே மிகச் சிறந்த பண்பாகும்.
• ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் = தமக்குத் துன்பம் தரும் இயல்புடையவரிடத்திலும்,• கண்ணோடி = பரிவும் இரக்கமும் கொண்டு,• பொறுத்தாற்றும் பண்பே தலை = அவர்கள் பிழையைப் பொறுத்துக் கொள்ளும் பண்பே மிகச் சிறந்த பண்பாகும்.
மு.வரதராசன்
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
பரிமேலழகர்
ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது. ('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)
சாலமன் பாப்பையா
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
Meaning in English
To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace





