Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 578

பொருட்பால்அரசியல்58. கண்ணோட்டம்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு.

karumanj sitaiyAmaR kaNNOTa vallArkkurimai uTaittiv vulaku

Medha Ramaswamy

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம் கடமைக்கும் நீதிமுறைக்கும் எந்தக் கேடும் வராமல், அதே சமயம் மனிதநேயத்தோடு பிறரிடம் பரிவு காட்ட வல்லவர்களுக்கே இந்த உலகம் உரிமை உடையதாகி அவர்களைப் போற்றும்.

• கருமம் சிதையாமல் = செய்ய வேண்டிய நீதிக் கடமை கெட்டுப் போகாமல்,• கண்ணோட வல்லார்க்கு = பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்ட வல்லவர்களுக்கு,• இவ்வுலகு உரிமை உடைத்து = இந்த உலகமே உரிமையாகி அவர்களைப் போற்றும்.

மு.வரதராசன்

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

பரிமேலழகர்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு - உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம். (தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல்,மேல் 'ஓர்ந்துகண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

Meaning in English

Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout