Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 577

பொருட்பால்அரசியல்58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.

kaNNOTTam illavar kaNNilar kaNNuTaiyArkaNNOTTam inmaiyum il

Usha Raj

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டும் 'கண்ணோட்டம்' இல்லாதவர்கள் உண்மையில் கண்கள் அற்ற குருடர்களே ஆவர்; அதேபோல் உண்மையான கண்ணுடைய சான்றோர்களிடம் இரக்கமில்லாத நிலை ஒருபோதும் இருப்பதில்லை.

• கண்ணோட்டம் இல்லவர் = பிறரிடம் இரக்கமும் பரிவும் காட்டாதவர்கள் கண்கள் இல்லாத குருடர்களே ஆவர்;• கண்ணுடையார் = உண்மையான கண்ணுடைய சான்றோர்களிடம்,• கண்ணோட்டம் இன்மையும் இல் = இரக்கப் பண்பு இல்லாத நிலை ஒருபோதும் இருப்பதில்லை.

மு.வரதராசன்

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

பரிமேலழகர்

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை. (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

Meaning in English

Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who've eyes can never lack the light of grace benign

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout