கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்புண்ணென்று உணரப் படும்
kaNNiR kaNikalang kaNNOTTam aஃtinRERpuNNen RuNarap paTum
Pavithra Balajee
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் = ஒருவனின் கண்களுக்கு அழகு தரும் அணிகலன் இரக்கப் பண்பே ஆகும்;• அஃதின்றேல் = அந்த இரக்கப் பண்பு இல்லாவிட்டால்,• புண்ணென்று உணரப்படும் = அது கண் அல்ல, வெறும் புண் என்றே கருதப்படும்.எளிய விளக்கம்:ஒரு மனிதனின் கண்களுக்கு அழகு தரும் அணிகலன் என்பது பிறரிடம் இரக்கமும் பரிவும் காட்டும் கண்ணோட்டமே ஆகும்; அந்த இரக்கப் பண்பு இல்லாவிட்டால் அந்தக் கண்கள் வெறும் புண் என்றே சான்றோரால் கருதப்படும்.
மு.வரதராசன்
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
பரிமேலழகர்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.
Meaning in English
Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face





