உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண்.
uLapOl mukattevan seyyum aLavinARkaNNOTTam illAta kaN
Idhazhiga
பொருள் / உரை
முருகா எளிய உரை
தக்க அளவிலான இரக்கமும் பரிவும் காட்டாத கண்கள், முகத்தில் இருப்பதாகத் தோன்றுவதைத் தவிர வேறு எந்தப் பயனும் தராது.
• அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் = தக்க அளவிலான இரக்கமும் பரிவும் இல்லாத கண்கள்,• முகத்து உளபோல் = முகத்தில் கண்கள் இருப்பது போலத் தோன்றுவதைத் தவிர,• எவன் செய்யும் = வேறு என்ன நற்பயனைச் செய்துவிடும்?
மு.வரதராசன்
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
பரிமேலழகர்
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். ('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?
Meaning in English
The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright





