Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 572

பொருட்பால்அரசியல்58. கண்ணோட்டம்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.

kaNNOTTat tuLLa tulakiyal aஃtilAruNmai nilakkup poRai

Alaina Sajith

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• உலகியல் = உலகத்தின் நல்லுறவுகளும் வாழ்க்கை முறைகளும்,• கண்ணோட்டத்து உள்ளது = பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டும் பண்பின் மீதே இயங்குகின்றது;• அஃது இலார் உண்மை = அப்பண்பு இல்லாதவர்கள் உயிரோடு வாழ்வது,• நிலக்குப் பொறை = பூமிக்கு ஒரு வீணான பாரச் சுமையே ஆகும்.எளிய விளக்கம்:மனித சமுதாயத்தின் சமூக நல்லுறவுகள் 'கண்ணோட்டம்' எனப்படும் பரிவான இரக்கப் பண்பினாலேயே இயங்குகின்றன; அத்தகைய பரிவு சிறிதும் இல்லாதவர்கள் உயிரோடு வாழ்வது இந்தப் பூமிக்கு வீணான பாரச் சுமையேயாகும்.

மு.வரதராசன்

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

பரிமேலழகர்

உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

Meaning in English

The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout