Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 571

பொருட்பால்அரசியல்58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.

kaNNOTTam ennung kazhiperung kArikaiuNmaiyAn uNTiv vulaku

Ganga

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறரிடம் பரிவோடும் இரக்கத்தோடும் பழகும் 'கண்ணோட்டம்' என்னும் மிகச் சிறந்த உள்ளத்து அழகு மக்களிடமும் தலைவர்களிடமும் இருப்பதால்தான், இந்த உலகம் அழியாமல் நிலைத்து வாழ்கின்றது.

• கண்ணோட்டம் என்னும் = பிறரிடம் பரிவோடும் கருணையோடும் பழகும்,• கழிபெருங் காரிகை = மிகச் சிறந்த மனத்து அழகு மனிதர்களிடம்,• உண்மையான் = நிலைத்து இருப்பதால்தான்,• இவ்வுலகு உண்டு = இந்த உலகம் அழியாமல் உயிரோட்டத்தோடு வாழ்கின்றது.

மு.வரதராசன்

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

பரிமேலழகர்

கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் உண்டாகாநின்றது. ('கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)

சாலமன் பாப்பையா

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

Meaning in English

Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout