Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 563

பொருட்பால்அரசியல்57. வெருவந்தசெய்யாமை

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

veruvanta seytozhukum vengkOla nAyinoruvantam ollaik keTum

Om Easwar

பொருள் / உரை

முருகா எளிய உரை

குடிமக்கள் அஞ்சி நடுங்கும்படியான கொடுஞ்செயல்களைச் செய்து அநீதியாக ஆளும் கொடுங்கோலன், எவ்வித சந்தேகமும் இன்றி நிச்சயமாக மிக விரைவிலேயே அடியோடு அழிந்து போவான்.

• வெருவந்த செய்து ஒழுகும் = மக்கள் அஞ்சி நடுங்கும் செயல்களைச் செய்து ஆட்சி புரியும்,• வெங்கோலன் ஆயின் = கொடிய அரசனாக ஒருவன் இருப்பானானால்,• ஒருவந்தம் = அவன் எந்த சந்தேகமும் இன்றி நிச்சயமாக,• ஒல்லைக் கெடும் = மிக விரைவிலேயே அழிந்து போவான்.

மு.வரதராசன்

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

பரிமேலழகர்

வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)

சாலமன் பாப்பையா

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

Meaning in English

Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout