Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 561

பொருட்பால்அரசியல்57. வெருவந்தசெய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

takkAngku nATit talaissellA vaNNattAlottAng koRuppatu vEntu

Kanniyaashree Kannan

பொருள் / உரை

முருகா எளிய உரை

நிகழ்ந்த குற்றத்தை நடுவுநிலை நின்று தீர ஆராய்ந்து, மீண்டும் அக்குற்றம் நிகழாதவாறு குற்றத்திற்கு ஏற்ற அளவில் பொருத்தமாகத் தண்டித்து வழிநடத்துபவனே சிறந்த ஆட்சியாளன் ஆவான்.

• தக்காங்கு நாடி = குற்றத்தை நடுவுநிலைமையோடு தீர ஆராய்ந்து,• தலைச்செல்லா வண்ணத்தால் = மீண்டும் அக்குற்றம் தொடராதவாறு தடுத்து,• ஒத்தாங்கு ஒறுப்பது = அக்குற்றத்தின் அளவிற்குப் பொருத்தமாகத் தண்டிப்பவனே,• வேந்து = சிறந்த தலைவன் அல்லது அரசன் ஆவான்.

மு.வரதராசன்

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பரிமேலழகர்

'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான். (தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.)

சாலமன் பாப்பையா

தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

Meaning in English

Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout