Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 560

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.

Apayan kunRum aRutozhilOr nUlmaRapparkAvalan kAvAn enin

Karthik Rajagopal

பொருள் / உரை

முருகா எளிய உரை

நாட்டைக் காக்க வேண்டிய தலைவன் முறைப்படி மக்களைக் காக்கத் தவறினால், நாட்டில் பசுக்களின் பால் வளம் குறையும்; கல்வி கற்பித்து அறம் போற்றும் சான்றோர்களும் தங்கள் ஞான நூல்களை மறந்து அறநெறி அழிய நேரிடும்.

• காவலன் காவான் எனின் = மக்களைக் காக்க வேண்டிய தலைவன் நீதி தவறாது காக்கத் தவறினால்,• ஆபயன் குன்றும் = அந்நாட்டில் பசுக்கள் தரும் பால் வளம் குன்றிப்போகும்;• அறுதொழிலோர் நூல் மறப்பர் = அறநெறி போற்றும் சான்றோர்களும் தங்கள் ஞான நூல்களை மறந்து அறம் அழியும்.

மு.வரதராசன்

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

பரிமேலழகர்

காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

Meaning in English

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout