Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 559

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.

muRaikOTi mannavan seyyin uRaikOTiollAtu vAnam peyal

Augustine Paul

பொருள் / உரை

முருகா எளிய உரை

நாட்டை ஆளும் தலைவன் நீதிநெறி தவறி அநீதியான கொடுங்கோல் ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் உரிய பருவகாலங்கள் மாறிப்போய், வானத்து மேகங்களும் மழை பொழியாமல் பொய்த்துப் போகும்.

• மன்னவன் முறைகோடிச் செய்யின் = ஆளும் தலைவன் நீதி நெறிமுறையிலிருந்து தவறி அநீதி செய்வானானால்,• உறைகோடி = அந்த நாட்டில் உரிய பருவகாலங்கள் தவறிப்போய்,• வானம் பெயல் ஒல்லாது = வானத்து மேகங்கள் மழை பொழியாமல் பொய்த்துப் போகும்.

மு.வரதராசன்

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

பரிமேலழகர்

மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

சாலமன் பாப்பையா

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

Meaning in English

Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout