Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 558

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.

inmaiyin innA tuTaimai muRaiseyyAmannavan kORkIzhp paTin

Diwakar

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• முறை செய்யா மன்னவன் = நீதி முறை செய்யாத கொடுங்கோலனின்,• கோற்கீழ்ப் படின் = கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ நேரிட்டால்,• இன்மையின் = வறுமை நிலையை விடவும்,• உடைமை இன்னாது = செல்வம் வைத்திருக்கும் செல்வ நிலையே மிகுந்த துன்பமானதாகும்.எளிய விளக்கம்:நீதி தவறாத நல்லாட்சி இல்லாத கொடுங்கோலனின் ஆட்சியின் கீழ் வாழ நேரிட்டால், ஏழை வறுமை நிலையை விடவும் செல்வம் வைத்திருக்கும் நிலையானது கொடுங்கோலனின் மிரட்டலுக்கும் பறிமுதலுக்கும் ஆளாகிப் பெரும் துன்பத்தைத் தரும்.

மு.வரதராசன்

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

பரிமேலழகர்

முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது. (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

Meaning in English

To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust king

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout