துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.
tuLiyinmai njAlattiR keRRaRRE vEntanaLiyinmai vAzhum uyirkku
A.T. Shankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
மழைத்துளி பெய்யாமல் போனால் உலகத்து உயிர்கள் எத்தகைய துயரத்தை அனுபவிக்குமோ, அதுபோலவே தலைவனிடம் கருணையும் அருளும் இல்லாத கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களும் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிப்பர்.
• துளி இன்மை = மழைத்துளி பெய்யாத வறட்சியானது,• ஞாலத்திற்கு எற்று = உலகில் வாழும் உயிர்களுக்கு எத்தகைய துன்பத்தைத் தருமோ,• அற்றே = அத்தகைய கொடிய துன்பத்தையே தரும்,• வேந்தன் அளியின்மை = தலைவனிடம் கருணையும் இரக்கமும் இல்லாத கொடுங்கோல் ஆட்சியானது,• வாழும் உயிர்க்கு = அவனது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு.
மு.வரதராசன்
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
பரிமேலழகர்
'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது.மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
Meaning in English
As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe





