Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 556

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.

mannarkku mannutal sengkOnmai aஃtinRElmannAvAm mannark koLi

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆட்சியாளர்களின் நற்புகழ் உலகில் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் நேர்மையான செங்கோல் நீதியே ஆகும்; அந்த நல்லாட்சி இல்லையானால், அவர்களின் புகழ் ஒளி நிலைக்காமல் அடியோடு அழிந்து போகும்.

• மன்னர்க்கு மன்னுதல் = அரசர்களுக்குப் புகழ் நிலைத்து நிற்பதற்குக் காரணம்,• செங்கோன்மை = நீதி தவறாத நேர்மையான செங்கோல் ஆட்சியே ஆகும்;• அஃது இன்றேல் = அந்த நேர்மையான ஆட்சி இல்லையென்றால்,• மன்னர்க்கு ஒளி மன்னாவாம் = தலைவர்களின் புகழ் ஒளி ஒருபோதும் நிலைக்காமல் மங்கி அழியும்.

மு.வரதராசன்

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

பரிமேலழகர்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா. (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே,தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

Meaning in English

To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout