Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 554

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.

kUzhung kuTiyum orungkizhakkum kOlkOTissUzhAtu seyyum arasu

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

பின்விளைவுகளைச் சிந்தித்து ஆராயாமல் நீதி வழுவிக் கொடுங்கோல் ஆட்சி செலுத்தும் ஆட்சியாளன், தன் கருவூலச் செல்வத்தையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையும் ஒருசேர அடியோடு இழந்து போவான்.

• கோல் கோடி = நீதி தவறி அநீதியாக ஆட்சி புரிந்து,• சூழாது செய்யும் அரசு = பின்விளைவுகளைச் சிந்தித்து ஆராயாமல் செயல்படும் ஆட்சியாளன்,• கூழும் குடியும் = தன் கருவூலச் செல்வத்தையும் அதை ஈட்டித் தரும் குடிமக்களையும்,• ஒருங்கு இழக்கும் = ஒரே நேரத்தில் ஒருசேர இழந்து விடுவான்.

மு.வரதராசன்

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

பரிமேலழகர்

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

சாலமன் பாப்பையா

மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

Meaning in English

Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall lose

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout