Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 553

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.

nAToRum nATi muRaiseyyA mannavannAToRum nATu keTum

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை நாள்தோறும் விழிப்புணர்வோடு ஆராய்ந்து நீதி தவறாது முறை செய்யாத ஆட்சியாளன், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நாட்டையும் அதிகாரத்தையும் இழந்து சீரழிவான்.

• நாடொறும் நாடி = நாள்தோறும் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து,• முறை செய்யா மன்னவன் = நடுவுநிலை நின்று நீதி வழங்காத தலைவன்,• நாடொறும் நாடு கெடும் = நாள்தோறும் சிறிது சிறிதாகத் தன் நாட்டை இழந்து அழிவான்.

மு.வரதராசன்

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

பரிமேலழகர்

நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது.இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

Meaning in English

Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout