குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.
kuTipuRang kAttOmpik kuRRang kaTitalvaTuvanRu vEntan tozhil
Ravi Gopinath
பொருள் / உரை
முருகா எளிய உரை
குடிமக்களைப் புறப்பகைவர்களிடமிருந்து பாதுகாத்து, அன்போடு பேணி வளர்த்து, நாட்டில் நிகழும் குற்றங்களைத் தண்டித்து ஒழிப்பது தலைவனுக்குப் பழியோ குறையோ அல்ல; அது அவனது தலையாய ஆட்சிக் கடமையாகும்.
• குடி புறங்காத்து = குடிமக்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாத்து,• ஓம்பி = தானும் துன்புறுத்தாமல் அன்போடு பேணி,• குற்றம் கடிதல் = அவர்களிடையே ஏற்படும் குற்றங்களைத் தண்டித்து நீக்குதல்,• வேந்தன் வடு அன்று = ஆட்சியாளனுக்குப் பழியோ குற்றமோ அன்று;• தொழில் = அது அவனது தலையாய கடமையாகும்.
மு.வரதராசன்
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
பரிமேலழகர்
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான். (துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.)
சாலமன் பாப்பையா
அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
Meaning in English
Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings





