Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 548

பொருட்பால்அரசியல்55. செங்கோன்மை

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.

eNpatattAn OrA muRaiseyyA mannavantaNpatattAn tAnE keTum

R. Sathesh Ragupathy

பொருள் / உரை

முருகா எளிய உரை

நீதி வேண்டி வரும் எளிய மக்கள் எளிதில் அணுக முடியாதவனாய், வழக்குகளை ஆராய்ந்து நேர்மையான நீதி வழங்காத ஆட்சியாளன், தன் நன்மதிப்பை இழந்து தாழ்ந்த நிலையை அடைந்து எதிரிகள் இல்லாமலேயே தானாகவே அழிந்து போவான்.

• எண்பதத்தான் ஓரா = நீதி வேண்டி வரும் எளிய மக்களுக்கு எளிதில் காணக் கிடைக்காதவனாய், வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயாதவனாய்,• முறை செய்யா மன்னவன் = நடுவுநிலைமை நின்று நேர்மையான நீதி வழங்காத தலைவன்,• தண்பதத்தான் = தன் நன்மதிப்பையும் பதவியையும் இழந்து தாழ்ந்த நிலையை அடைந்து,• தானே கெடும் = புறப்பகைவர்கள் இன்றியே தானாகவே அழிந்து போவான்.

மு.வரதராசன்

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

பரிமேலழகர்

'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

Meaning in English

Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout