வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.
vElanRu venRi taruvatu mannavankOlatUung kOTA tenin
Harish Kaleeswaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு தலைவனுக்கு நிலையான வெற்றியைத் தேடித்தருவது அவன் கையில் ஏந்திய கூரிய வேற்படைகள் அல்ல; அவன் செலுத்தும் நேர்மையான செங்கோல் ஆட்சியே ஆகும்; அந்த ஆட்சியும் சிறிதும் கோணாமல் நீதி தவறாததாக இருக்க வேண்டும்.
• மன்னவன் வென்றி தருவது = ஒரு தலைவனுக்கு உண்மையான வெற்றியைத் தருவது,• வேல் அன்று = அவன் ஏந்திய கூரிய ஆயுதப் படை அன்று;• கோல் = அவனது நேர்மையான செங்கோல் ஆட்சியே ஆகும்;• அதூஉம் கோடாது எனின் = அந்தச் செங்கோலும் சிறிதும் நேர்மை தவறாமல் இருக்குமானால் மட்டுமே அது வெற்றியைத் தரும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
பரிமேலழகர்
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)
சாலமன் பாப்பையா
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
Meaning in English
Not lance gives kings the victory, But sceptre swayed with equity





