இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.
iyalpuLik kOlOssu mannava nATTapeyalum viLaiyuLun tokku
Narayanan Ravishankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
நீதிநூல்கள் கூறிய நெறிப்படி நேர்மையான செங்கோல் ஆட்சி நடத்தும் தலைவனின் நாட்டில், தவறாமல் பொழியும் பருவமழையும், குறையாத வளமான நில விளைச்சலும் எப்போதும் ஒருசேரக் கூடிச் செழிக்கும்.
• இயல்புளி = நீதிநூல்கள் கூறிய நெறிமுறைப்படி,• கோல் ஓச்சும் = நேர்மையான செங்கோல் ஆட்சி புரியும்,• மன்னவன் நாட்ட = தலைவனின் நாட்டில்,• பெயலும் = தவறாமல் பெய்யும் பருவமழையும்,• விளையுளும் = நிலத்தில் கொழிக்கும் செழுமையான விளைச்சலும்,• தொக்கு = எப்போதும் ஒருசேர நிறைந்திருக்கும்.
மு.வரதராசன்
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
பரிமேலழகர்
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
Meaning in English
Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields





